பல்கலைக் கழக உபவேந்தர் பதவி என்பது வகைப் பொறுப்புக் கூறவேண்டியதும் சவால் நிறைந்ததுமாகும் என கிழக்குப் பல்கலைக் கழகத்தின் புதிய உபவேந்தர் தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கடமைப் பொறுப்புக்களை ஏற்கும் முகமாக அவருக்கு அளிக்கப்பட்ட பிரமாண்டமான வரவேற்பு நிகழ்வில் அவர் உரையாற்றினார்.
கிழக்குப் பல்கலைக் கழக பொறுப்பு வாய்ந்த அதிகாரி உமா குமாரசுவாமி தலைமையில் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழக பிரதான மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்வு இடம்பெற்றது.
0 Comments