மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடத்தில் கார் ஒன்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் அதில் பயணம் செய்த இருவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை வேளையில் நடந்துள்ளதாகவும், காரில் பயணம் செய்த இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடியிலிருந்து கல்முனை நோக்கி வேகமாக வந்த காரின் முன்சக்கரம் வெடித்ததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
எனினும் கார் தண்ணீருக்குள் பாயவில்லையெனவும், அவ்வாறு இடம்பெற்றிருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் எனவும் சம்பவத்தினை கண்டவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





0 Comments