Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் உயிரியல் விஞ்ஞானத் துறையில் முதலிடம்

மட்டக்களப்பு, நல்லையா வீதியைச் சேர்ந்த  மாணவன் இராசலிங்கம் ரிசோத்மன் அவர்கள் மட்/ புனித மிக்கேல் கல்லூரியில் கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில்  உயிரியல் விஞ்ஞானத் துறையில் தோற்றி மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினையும்(1), தேசிய மட்டத்தில் பத்தாவது(10) இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவர் கூறுகையில் இந்த பரீட்சையில் சித்தியடைய தனது பெற்றோரதும், ஆசிரியர்களதும் தூண்டுகோலும், வழிகாட்டலும் , தமது விடாமுயட்சியுமே காரணமாகும் என்றார்.


மேலும் அவர் தனது தந்தை க.இராசலிங்கம் ( ஆசிரியர் - சிவானந்தா தேசிய பாடசாலை), தாய் ராஜ்நளா ஆகியோருக்கும், தமது பாடசாலை ஆசிரியர்கள், நிருவாகத்தினர் போன்றோருக்கும் , தனியார் கல்வி ஆசிரியர்களுக்கும், தனக்கு ஆரம்ப வகுப்பில் இருந்து  இன்று வரை கற்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்ததுடன், முக்கியமாக ஓய்வு பெற்ற வலயக்கல்விப் பணிப்பாளர் ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தமூர்த்தி அவர்களுக்கும் விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். 

உயிரியல் விஞ்ஞானத் துறையில் தோற்றி மாவட்ட மட்டத்தில் முதளிடத்தினைப் பெற்ற ரிசோத்மன் அவர்களுக்கு வற்றி நீயூஸ் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Post a Comment

0 Comments