Home » » 5 வயதில் காணாமல் போன கல்முனைச் சிறுமி 17 வயதில் கண்டுபிடிப்பு

5 வயதில் காணாமல் போன கல்முனைச் சிறுமி 17 வயதில் கண்டுபிடிப்பு

எனக்கு 10வருடங்களுக்கு பிறகு பிறந்த பிள்ளைதான் கேசானி. சுனாமியன்றுகாலை கல்முனை மாமாங்க அறநெறிப்பாடசாலைக்கு சென்றசமயம் சுனாமி இடித்தது.
அப்போது அவருக்கு வயது 5. நாமும் சுனாமியால் பாதிக்கப்பட்டு பிள்ளையைத் தேடினோம். யாரோ தூக்கிக்கொண்டு போனதாக அறிந்தோம். அதன்பின் தேடாத இடமில்லை. அலைந்தோம் கதறினோம் கிடைக்கவில்லை. ஒலுவிலுக்குச்சென்று புகாரி என்பவரிடம் மை போட்டுப் பார்த்தோம். அவர் சொன்னார். தற்போது பறந்தாலும் பிள்ளை கிடைக்காது. ஆனால் பத்து வருடங்களுக்குப் பிறகு கிடைக்கும் என்று. இந்நிலையில் கடந்த பத்தவருடங்களாக காத்துக் கிடந்தோம். கடந்த வாரம் கல்முனைப்பொலிநில் ஒரு 16வயதுமதிக்கத்தக்க ஒரு பிள்ளை பிடிபட்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அங்கு சென்றபோது பிள்ளை உயிரோடு இருப்பது தெரிந்தது. ஆனால் கல்முனைப்பொலிசார் அப்பிள்ளையை சிறுவர் நன்னடத்தைப் பிரிவினூடாக கல்முனை நீதிமன்றத்தில் பாரப்படுத்தி அம்பாறை சிறுவர் புகலிடத்திற்கு அனுப்பியுள்ளனர். நானும் மனைவியும் சிறுவர் நன்னடத்தைப் பிரிவினர் மற்றும் காரைதீவிலுள்ள மனிதஅபிவிருத்தி தாபனத்தினரின் உதவியோடு அம்பாறை சென்று பிள்ளைப் பார்த்த போது அவர் தாயைப் பார்த்து கதறி அழுதார். அவரது அங்க அடையாளங்களை வைத்து எமது பிள்ளைதான் என்பதை உறுதிப்படுத்தினோம். எம்மிடம் பிறப்பத்தாட்சிப்பத்திரமுமுண்டு. 5 வயதில் எடுத்த படமும் உண்டு. இதோ அது. ஆனால் பின்னர் சிங்களத்திலும் தமிழிலும் தனது கடந்தகாலம் பற்றி எதுவுமே தெரியாது என்று கூறியுள்ளார். இதனிடையே மற்றுமொரு குடும்பம் உரிமை கோருவதாக அங்கு சொல்லப்பட்டது. எனவே நாம் எதிர்வரும் திங்களன்று கல்முனை நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளோம். அதனூடாக டிஎன்ஏ பரிசோதனை மூலம் சட்டப்படி பிள்ளையை மீட்டெடுக்கலாம் என்று கருதுகின்றேன். என்றார். கல்முனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி எ.டபிள்யு.அப்துல் கபாரிடம் கேட்டபோது அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். இப்பிள்ளை தெருவில் அலைந்ததாகக் கூறிக் கிடைத்த தகவலையடுத்து நாம் பொலிஸ் நிலையத்திற்குக் கொணர்ந்து கல்முனை சிறுவர்நன்னடத்தைப் பிரிவினருடாக நீதிமன்றிற்குப் பாரப்படுத்தி மாத்தறை சிறுவர் புகலிடத்திற்கு அனுப்புவதற்காக தற்காலிகமாக அம்பாறை சிறுவர் புகலிடத்தில் ஒப்படைத்துள்ளோம். இவர் தான் ஒரு அனாதையென்றும் முன்னர் கல்முனைக்குடியில் தனது பெரியம்மா பெரியப்பா குடும்பத்தோடு வாழ்ந்ததாகவும் அங்கு அவர்கள் தன்னை வதை செய்வதால் தப்பி ஓடியதாகவும் சொன்னார். என்றார். மேலும் அவர் கூறுகையில், இவர் கடந்த வருட இறுதிப்பகுதியில் இப்படியாக பிடிப்பட்டபோது அவரை திருமலை கந்தளாய் சிறுவர் புகலிடத்திற்கு அனுப்பியிருந்தோம். அவர் அங்கிருந்து இம்மாதம் தப்பியோடி வந்து கல்முனையில் அலைந்த போது இரண்டாவது தடவையாக மாட்டியுள்ளார். இப்போது அம்பாறையில் உள்ளார். யார் பெற்றோர் என்பதை நீதிமன்றமே முடிவு செய்யவேண்டும். என்றார். இப்பிள்ளை கேசானியா? முகமட் அப்றாவா? என்பதை நீதிமன்றமே முடிவு செய்யவேண்டும். அன்று சாலமன் சபையில் நடந்த ஒருபிள்ளைக்கு இருதாய் உரிமைகோரியது போன்ற வழக்கு இன்று கல்முனை நீதிமன்றத்தில் நடக்கப்போகிறதோ?? பொறுத்திருந்துபார்ப்போம்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |