Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்கன் விமானத்தின் A-340 ரக விமானசேவை இடைநிறுத்தம்

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான A-340 எயார்பஸ் விமான சேவை இன்று முதல் இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானமானது இறுதியாக மதுரையிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஸ்ரீலங்கன் விமானநிறுவனத்திற்கு சொந்தமாக  A-340 ரக எயார்பஸ் விமானங்கள் 6 காணப்பட்டதாகவும் அவற்றில் 5 சேவைகள் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸின் தயாரிப்பான இந்த விமானம் 4 என்ஜின்களைக் கொண்ட விமானம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஆசியாவிற்கு A-340 ரக விமானத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்திய பெருமை ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தையே சாரும்.
இந்த விமானம் மூலம் ஒரே தடவையில் 15 ஊழியர்கள் உள்ளடங்களாக 300 பேர் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விமானத்திற்கு பதிலாக A-330-300 ரக எயார் பஸ்ஸை பயன்படுத்த ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments