Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

”ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” 24 மணிநேரத்தில் 3000 முறைப்பாடுகள்

”ஜனாதிபதியுடன் தெரிவியுங்கள் ” என்ற சேவையூடாக 3000ற்கும் மேற்பட்டோர் நேற்று வரை தமது பிரச்சினைகளை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியாக மைத்திரபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதையொட்டி மக்களின் பிரச்சினைகளை மக்கள் நேரடியாக ஜனாதிபதியிடம் தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி நேற்று வரை குறிப்பிட்டளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
குறித்த புதிய சேவையின்படி தொலைபேசி மூலம் ஜனாதிபதிக்கு தெரிவிக்க 1919 என்ற இலக்கத்தை அழைத்து தேவையான மொழியை தெரிவு செய்து அதனை தொடர்ந்து இலக்கம் இரண்டை அழுத்தி அந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும். மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்க வேண்டுமாயின் tell@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் ,இணையத்தளம் மூலமாக தெரிவிக்க வேண்டுமாயின் tell.president.gov.lk என்ற முகவரியூடாகவும் ஜனாதிபதிக்கு தெரிவிக்க முடியும். கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டுமாயின் ” ஜனாதிபதிக்கு தெரிவிக்க , தபால் பெட்டி இலக்கம் 123 , கொழும்பு என்ற முகவரிக்கு கடிதத்தை அனுப்பி வைக்க முடியும்.

Post a Comment

0 Comments