பொரளையில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக கொழும்பின் முக்கிய வீதிகள் பலவும் தற்போது கடும் போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்டுள்ளன.
களனி வெலி பாதை என்றழைக்கப்படும் கொழும்பு தெமட்டகொடை தொடக்கம் அவிசாவளை வரையான ரயில் பாதை , பொரளை ஊடாக ஊடறுத்துச் செல்கின்றது.
இந்த நிலையில் இன்று இப்பாதை வழியே பயணித்த ரயில் ஒன்று பொரளை கொட்டா வீதி அருகே தடம்புரண்டுள்ளது.
இதன் காரணமாக கொட்டா வீதியை ஊடறுத்துச் செல்லும் நாடாளுமன்ற நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் பேஸ்லைன் வீதியில் தெமட்டகொடை தொடக்கம் நாராஹேன்பிட்டி வரையான பகுதியும், மருதானை தொடக்கம் பொரளை வரையான வீதியும் போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்டுள்ளன.


0 Comments