பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடையை வழங்காது அவர்களுக்கு வவுச்சர் முறையை அறிமுகப்படுத்தி அவர்கள் மத்தியில் இனங்கள் ரீதியாக பிரிவினை வாதத்தை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாக பொதுபல சேனா குற்றஞ்சாட்டுகின்றது.
இன்று கொழும்பில் பொதுபல சேனா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிங்கள மாணவர்களுக்கு குறைந்த பெறுமதியுடைய வவுச்சர்களும் முஸ்லிம் மாணவர்களுக்கு கூடிய விலையுடைய வவுச்சர்களையும் வழங்கி அரசாங்கம் அவர்களுக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் அந்த ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


0 Comments