Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

குசால்பெரேரா விவகாரம் காரணமாக குழப்பமான நிலையில் டெஸ்ட் தொடரை எதிர்கொள்ளும் இலங்கை

நியுசிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் டனடெனில் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் விக்கெட் காப்பாளர் குசால் பெரேரா போதைப்பொருள் பாவனைக்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை இலங்கை அணிக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அணியின் விக்கெட்காப்பாளர் குசால்பெரேரா சமீபத்தில்மருந்துகளை பாவித்ததை ஏற்றுக்கொண்டுள்ளார் ஆனால் தான் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் எதனையும் பயன்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார் என இலங்கைஅணியின் பயிற்றுவிப்பாளர் ஜெரோம் ஜயரட்ண தெரிவித்துள்ளார்.
குசால்பெரேரா திங்கட்கிழமை மாலை போதைப்பொருள் பாவனைக்காக தடைசெய்யப்ட்டிருந்தார், நியுசிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்ட வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த சர்வதேசகிரிக்கெட் பேரவையின் இந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.
குசால் தனது காலில் ஏற்பட்ட பூச்சிக்காக சமீபத்தில் மருந்துகளை பயன்படுத்தியிருந்தார் என தெரிவித்துள்ள ஜயரட்ண அவர் தடைசெய்யப்பட்ட மருந்தினை பயன்படுத்தினார் என தாங்கள் கருதவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேசகிரிக்கெட் பேரவையின் அறிவிப்பு வெளியானதும் நாங்கள் இது குறித்து ஆராய்ந்தோம் குசால் தான் அவ்வாறான மருந்துகள் எதனையும் எடுக்கவில்லை என கருதுகின்றார்,இதனை அவர்கள் எவ்வாறு விசாரணைசெய்யப்போகின்றார்கள் எனபதிலேயே அடுத்த கட்டம் தங்கியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை வழமையாக வீரர்களிற்கு தடைசெய்யப்பட்ட மருந்துகள் குறித்து அறிவுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதில் சில வழமையான மருந்துகளும், உடல்வலிமையை அதிகரிப்பதற்;கு பயன்படுத்தப்படும் பொருட்களும் காணப்படுகின்றன.
சாவதேச கிரிக்கெட் பேரவை தொடர்ச்சியாக பரிசோதனைகளை மேற்கொண்டுவருகின்றது,வீரர்களிற்கும் இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது,தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பட்டியல் தொடர்ச்சியாக மாறிக்கொண்டுள்ளது,வீரர்களிற்கு அவர்கள் பனடோல் எடுப்பதாகயிருந்தாலும் இது குறித்து அணியின் மருத்துவர்களிற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,என்ன நடந்தது என பொறுத்திருந்து பார்க்கவேண்டும் நாங்கள் குழப்பத்தில் உள்ளோம் என ஜயரட்ண தெரிவித்துள்ளார்.
குசால் தடைசெய்யப்பட்டமை டெஸ்;ட்தொடரில் அணியின் நம்பிக்கைகளிற்கு பாரிய பாதிப்பாக அமைந்துள்ளது,இது பாரிய பாதிப்பாக அமையும் என நாங்கள் கருதுகின்றோம், அவரே அணியின் முக்கிய விக்கெட்காப்பாளர்,மற்றும் அணியின்போக்கை மாற்றகூடிய அதிரடி துடுப்பாட்ட வீரர்,டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு சில நாட்களிற்கு முன்னர் இது இடம்பெற்றுள்ளது,நாங்கள் இதிலிருந்து மீள்வதற்கு முயல்கின்றோம்,தினேஸ் சந்திமல் விக்கெட்காப்பளராக பணியாற்றுவர் என ஜெயரட்ண குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணி ஏற்கனவே அதன் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் தம்மிகபிரசாத் காயம் அடைந்ததன் காரணமாக இலங்கை திரும்பியுள்ள நிலையில் முதலாவது டெஸ்டை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments