கடந்த சில நாட்களாக வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தற்போது நாட்டினை விட்டு விலகியுள்ள போதும் மேலும் புதியதொரு வானிலை மாற்ற குழப்பத்தினால் இன்று மழையுடன் கூடிய காலநிலையே நாடு முழுவதும் தொடரும் சாத்தியமுள்ளதென என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பிற்பகல் 12 மணிக்கு பின்னர் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் நிலவலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இம் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லி மீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் வட,வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலையிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. சில பிரதேசங்களில் காலையில் பனியுடன் கூடிய காலநிலை நிலவலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடலோரங்களில் இடி மின்னலுடன் அதிக மழைக்கான சாத்தியம் நிலவுவதனால் அனைத்து மீனவர்கள் கடல் சார்ந்த தொழிலாளர்கள் கடற்படை வீரர்கள் என அனைவரையும் கவனத்துடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


0 Comments