கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் இடம்பெற்ற விபத்துக்களில் 7 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி எஹலியகொட பிரதேசத்தில் கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியில் மஞ்சட்கடவை ஊடாக பாதையை கடக்க முயன்ற 70 வயதான முதியவர் ஒருவர் பஸ் வண்டியில் மோதுண்டு பலியாகியுள்ளதுடன் பஸ் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவிஸ்ஸாவெல பிரதேசத்தில் பஸ் வண்டியும் மோட்டார் வண்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மோட்டார் வண்டியில் பயணித்த ஹங்வெல்லயை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் பஸ் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வென்னப்புவ பிரதேசத்தில் கொழும்பு - புத்தளம் ரயில் பாதையில் கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி சென்ற ரயிலில் பாய்ந்து 20 வயதான இளைஞர் ஒருவர் பலியாகியுளள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் மாதம்பிட்டிய வீதியில் மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 57 வயதான நபர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, கிளிநொச்சி விஸ்வமடு பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 21 வயதான இளைஞர் ஒருவரும் பலியாகியுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.



0 Comments