Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வைத்தியர்கள் ,பொறியியலாளர்கள் உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்

2016 வரவு செலவ திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கான சலுகைகளை குறைக்கும் விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடலாவிய ரீதியில் அரச வைத்தியர்கள் , பொறியியலாளர்கள் , கணக்காய்வாளர்கள், நில அளவையாளர்கள் உள்ளிட்ட 17 துறைகளை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட தீர்மானித்துள்ளனர்.
அடையாள வேலை நிறுத்தமாக இன்று மட்டும் அவர்கள் இந்த போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள போதும் அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில்  தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் இன்று சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கையொன்றை இன்று காலை முதல் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments