Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்புக்குப் போனா……! பாயோட ஒட்ட வெய்ப்பாங்க…! இதன் மர்மம் என்ன ?

மட்டக்களப்பு’ன்னு சொன்னதுமே பொதுவாகவே சொல்ற கொமண்ட் ‘பாத்து கவனமா இருடா, பாயோட ஒட்டவச்சுருவாங்க’ என்றதுதான். உண்மைதான்.
பாயோட ஒட்டவச்சுருவாங்க என்பது உண்மைதான் ஆனால் அதுக்குப்பின்னால இருக்கிற காரணம் வேற. சாதாரணமா செய்வினை, ஏவல், சூனியம் போன்ற தனிப்பட்ட பயங்கள் எதுவுமில்ல. வீட்டில் பெண்பிள்ளை இருந்தால் மாப்பிள்ளை ஆக்க செய்வினை வைப்பாங்க என்றில்லை. அட ‘கருநா’ பயம்கூட இல்லை.
இவங்களோட விருந்தோம்பல்ல, அந்நியோன்னியமான, நட்பான பழக்கத்தில இந்த மக்களோடு பழகத்தொடங்கினா அது கடைசிகாலம் வரைக்கும் மறக்காது. யாரெண்டே தெரியாட்டிலும் மகன், மகள் எண்டு கதைக்கிறத நான் வேற எங்கயுமே கண்டதில்ல.
உதவி செய்ய தயங்குறதா நான் யாரையும் கண்டதில்லை. (விதிவிலக்குகள் உண்டு). சாதாரணமா விசிட் போனாக்கூட சாப்பாடு போட்டு அனுப்புறத வழக்கமா வச்சிருக்கிற சனம்யா இது. உக்காந்து சாப்பிட்டா அவங்கட உபசரிப்பிலயும் அந்நியோன்னியத்திலும் நம்ம அவங்களை லேசில மறக்கமாட்டோம் என்றதுதான் ஹைலைட்.
உண்மையாக ‘பாயோட ஒட்டவச்சுருவாங்க’ என்ற வசனம் இங்க கிட்டத்தட்ட எல்லாருக்கும் பொருந்தும். ஆனா அதை பலர் வேற விதமா சொல்றது அதை சொல்பவர்களுக்கு இருக்கும் வருத்தம்.
” மட்டக்களப்பு என்று சொல்லடா! மண்ணில் பெருமை கொள்ளடா!”
முகநுால்.batti

Post a Comment

0 Comments