2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வடக்கு கிழக்கிக்கு முற்றுமுழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதன் இன்று வரவுசெலவு திட்டம் தொடர்பாக கருதது தெரிவிக்கையில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
குறிப்பாக யுத்தத்தால் பாதீக்கப்பட்ட மக்களுக்கு 2016ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.
போரினால் பாதீக்கப்பட்ட மக்களுக்கு விசேட சலுகைகளை நல்லாட்சி அரசு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அவர்கள் தொடர்பாக எந்த திட்டமும் குறித்த வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாமை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதுதவிர மீனவர்கள், விவசாயிகள் உட்பட அரச உத்தியோகஸ்தர்களுக்கு சொல்லத்தக்க விதத்தில் நன்மைகள் எதுவும் இல்லை என்றார்.


0 Comments