Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் வாழ்வாதார உதவி பயனாளிகளுக்கான நேர்முக தேர்வு

கடந்த கால யுத்த சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் வாழ்வாதார உதவிகள் மற்றும் வீடமைப்பு கடன்களை வழங்கும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான நேர்முகத்தேர்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
புனர்வாழ்வு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவுசெய்யப்பட்ட 74 பேருக்கு வாழ்வாதார உதவிகளும் 55பேருக்கு வீட்டுக்கடன்களையும் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றது.
இந்த நேர்முக தேர்வு நிகழ்வில் புனர்வாழ்வு அபிவிருத்தி திணைக்களத்தின் வேலைத்திட்ட பணிப்பாளர் கே.புகேந்திரன்,பிரதிப்பணிப்பாளர்களான பதூர்தீன்,ஹசைன்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட இலங்கை வங்கியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான நேர்முகத்தேர்வுகள் நடைபெற்றதுடன் புதிய விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
IMG_0023IMG_0027

Post a Comment

0 Comments