யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயில் மோதி வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் புகையிரத பாதுகாப்பு கடவையில் கடமையில் இருந்த உத்தியோகத்தர் மரணமடைந்துள்ளார்.
இன்று காலை யாழில் இருந்து கொழும்பு நோக்கி ரயில் சென்ற வவுனியா, மூன்று முறிப்பை அண்மித்த போது புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய குடும்பஸ்தர் ஒரு பக்க கேற்றை மூடிவிட்டு மற்றைய கேற்றை மூட முற்பட்ட போது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இதில் ஜோசப் செல்வநாயகம் (வயது 58) என்பவரே மரணமடைந்தவராவார்.
தற்போது சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
தற்போது சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

0 Comments