அம்பாறை இராணுவ முகாமில் லெப்டினன்ட் ஒருவர் T56 ரக துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
குறித்த அதிகாரி இன்று காலை தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மவதகம பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய லெப்டினன்ட் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இவர் குறித்த முகாமில் பயிற்சி ஆலோசகராக செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த அதிகாரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments