Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு ஐயன்கேணி காட்டுக்குள் ஆசிரியர் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு!

மட்டக்களப்பு ஐயன்கேணி காட்டுப் பகுதிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஐயன்கேணி மயானத்திற்கு பிற்பகுதியில் காணப்படும் காட்டுப்பகுதிக்குள் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலத்தினை பொதுமக்கள் கண்டுள்ளனர்.
ஐன்கேணியைச் சேர்ந்த ஆசிரியரான அழகையா அச்சுதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக அடயாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் வாகரை பாடசாலையில் சித்திரப்பாட ஆசிரியர் என்பதுடன் இவர் ஆலயங்கள் உட்பட பல இடங்களில் ஓவியங்கள் வரையும் சிறந்த ஓவியர் எனவும் தெரியவந்துள்ளது.
இவரது தற்கொலைக்கான காரணம் மிகவும் மர்மம் நிறைந்ததாக உள்ளதாக ஊர் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக ஏறாவூர் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

Post a Comment

0 Comments