உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் திட்டமிட்டவாறு நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மூன்று மாத காலத்திற்கு ஒத்தி வைக்கப்படவுள்ளது.
பெரும்பாலும் எதிர்வரும் 2016ம் ஆண்டு ஜூன் மாதமளவில் தேர்தல் நடைபெறும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லை நிர்ணய குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் எழுந்த சர்ச்சைகளே இவ்வாறு தேர்தல் ஒத்தி வைக்கப்படக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
எல்லை நிர்ணயம் தொடர்பில் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
எனவே, இந்த எதிர்ப்புக்கள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணய குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு எந்த முறையில் தேர்தல் நடத்துவது என்பது குறித்து கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்படும் வரையில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


0 Comments