Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு: கண்டுபிடிக்க உதவிய சிறுவர்கள்

கைக்குண்டு ஒன்று, சிறுவர்களினால் இணங்காணப்பட்டு, தகவல் தெரிவித்ததன் ஊடாக, மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை, மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேத்தாழை முருகன் ஆலயத்துக்கு அருகிலுள்ள நீரோடையிலிருந்து கைக்குண்டு,  மீட்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் பெய்யும் அடைமழை காரணமாக நீர் ஓடைகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக சிறுவர்கள் சிலர் ,குறித்த பிரதேசத்திலுள்ள நீரோடையில் மீன்பிடித்து விளையாடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது ஓடையின் அருகில் காணப்பட்ட மண் நீர் அலையின் தாக்கத்தினால் அரிப்புக்குள்ளாகி காணப்பட்டுள்ளது. இதன்போது மர்மப்பொருளொன்று காணப்படுவதனைக் கண்டு, அதனை எடுத்து பார்வையிட்ட பின்னர் பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர்,  பெற்றோர்கள் கல்குடா பொலிஸாருக்கு தகவல் வழங்கியமையினையடுத்து பொலிஸார் அதனை மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments