Advertisement

Responsive Advertisement

அவுஸ்ரேலிய முக்கிய பிரதிதிநிகள் மட்டக்களப்பு- ஒக்ஸ்பாம் விஜயம்


அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி மற்றும் அவுஸ்ரேலிய வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வர்த்தக பிரிவின் ஆலோசகர் சாரோரி புளுன்டல் ஆகியோர் 29 வியாழன் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டனர். ஆவர்களின் இவ்விஜயத்தின் போது அவுஸ்ரேலிய வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வர்த்தக பிரிவினால் வழங்கப்பட்ட நிதியுதவியை கொண்டு ஒக்ஸ்பாம் அரசசார்பற்ற நிறுவனத்தின் வழிகாட்டலுடன் ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் பங்காளர் ஊடாக நடைமுறைப்படுத்தும் நெசவு தொழிலாளருடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் உற்பத்தியையும் பார்வையிட்டனர். ஆதனை தொடர்ந்து ஒக்ஸ்பாம் நிறுவன பங்காளர்கள் மற்றும் பால்நிலை சமத்துவ மற்றும் பெண்கள் மேம்பாடு தொடர்பாக பணியாற்றும் நிறுவனங்கள் மற்றும் நபர்களுடன் கலந்துரையாடலை ஒக்ஸ்பாம் நிறுவனத்தில் மேற்கொண்ட அதனை தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் வன்முறைக்கு உட்பட்ட பெண்கள்,ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு உதவிகளை வழங்கும் மற்றும் இணைப்பாக்கம் செய்யும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு உதவிகளை மேற்கொள்ளும்அமைப்பு (புடீஏ) அங்குள்ள வைத்திய கலாநிதிகள் மற்றும் வைத்திய அதிகாரிகள் தாதியர் மற்றும் அரச அரச சார்பற்ற நிறுவன ஊழியர்களை சந்தித்து இதுபற்றி மேலதிக தகவல்களை கேட்டறிந்து கொண்டனர்.
   

   

Post a Comment

0 Comments