கிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசு 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கார்லோட்டே ப்ளண்டெல் தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த உயர் ஸ்தானிகர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டை சந்தித்து பேச்சு நடாத்தியபோது இதனை தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஈஸ்ட லகூன் விடுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தற்போதைய நிலைமைகளை கேட்டறிந்த உயர் ஸ்தானிகர் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் முதலமைச்சருடன் கலந்துரையாடியுள்ளார்.
சட்டரீதியற்ற முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் நுழையும் இலங்கையர்களை தடுப்பதில் பாரிய பங்குளிப்பு செய்த இலங்கை பொலிஸாருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

.jpg)
0 Comments