Advertisement

Responsive Advertisement

கல்குடாவில் மோட்டார் குண்டு மீட்பு

வாழைச்சேனை கல்குடா பொலிஸ் பிரிவில் இன்று மாலை வெடிப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கல்குடாப் பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச சபை ஊழியர்கள் வெள்ளம் காரணமாக தேங்கி நிற்கும் வெள்ள நீரினை வழிந்தோடச் செய்யும் முகமாக பெக்கோ இயந்திரத்தின் துணையுடன் வடிகான் அமைக்கும் பணியினை கல்குடாவில் முன்னெடுத்தனர்.
இதன்போது மர்மப் பொருள் ஒன்று தென்படுவதையடுத்து அருகிலுள்ள கல்குடாப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். பின்னர் குறித்த மர்மப் பொருள் ஆட்லறி 122 மோட்டார் குண்டு என அடையாளங் கண்டனர்.
பின்னர் குண்டு செயழிக்கச் செய்யும் தொப்பிக்கலை இராணுவப் பிரிவினர் வரவழைக்கப்பட்டு அவற்றினை செயழிக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தற்போது பிரதேச சபையினால் முயுனெடுக்கப்பட்ட குறித்த வேலைத் திட்டமானது தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு கருதி பொலிஸாரின் பதிலை எதிர்பார்த்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சபையின் செயலாளர் எஸ்.எம்;.சிஹாப்தீன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments