நிலையங்களில் யாசகம் செய்வது நாளை முதலாம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி ரயில்களுக்குள்ளே அல்லது ரயில் நிலையங்களுக்குள் யாரேனும் யாசகத்தில் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என திணைக்களம் அறிவித்துள்ளது.
யாசகர்களின் செயற்பாடுகளால் ரயில் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் இதனால் அங்கு யாசகத்தில் ஈடுபடுவதனை தடுக்க நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் இதற்காக பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 Comments