Advertisement

Responsive Advertisement

மாணவர்கள் மீது பொலிசாரின் தாக்குதலைக் கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

கடந்த 29ம்  திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை கண்டித்து இன்று  மதியம் 12.30.மணியளவில் திருகோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் மாணவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.
திருகோணமலை கன்னியா வீதியில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் முன்பாகவே இவ் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.
பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்களினால் கடந்த வியாழக்கிழமை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டக்கார்களை கலைப்பதற்காக பொலிஸார், தண்ணீர் பீய்ச்சியுள்ளதுடன், கண்ணீர்ப்புகைப் பிரயோகம், மற்றும் தடியடி பிரயோகம் என்பனவற்றினை மேற்கொண்டிருந்தனர்.
அதன்போது பல மாணவர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும் உயர்கல்விக்கு நிகரான தமது கல்வித்தரத்தினை உயர்த்துமாறு கோரிக்கைவிடுத்தும் மாணவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நல்லாட்சி அரசே மாணவர்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள், HNDA மாணவர்கள் மீது தாக்கியமையை வன்மையாக கண்டிக்கின்றோம் போன்ற பதாதைகளை ஏந்தியபடி குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Post a Comment

0 Comments