மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வக்கியல்ல உப தபால் நிலையத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 12 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 30 பவுண் தங்க நகைககள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் நேற்று புதன் கிழமை மாலை இடம்பெற்றிருப்பதாக உபதபால் அதிபர் மாணிக்கப்போடி சித்ரவேல் தெரிவித்ததர்.
வெல்லாவெளி கண்ணகை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான தங்க நகைகள் பாதுகாப்புக்காக குறித்த உபதபால் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், இவ்வாறு வைக்கப்பட்டிருந்த நகைகளே திருடப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை உபதபால் அதிபர் தபாலகத்தை திறந்து வைத்து விட்டுவெளியில் சென்றதை பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள் தபாலக பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments