கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற சான்றுப்பொருள் காம்பகத்தை உடைத்து கஞ்சா திருடிய சந்தேக நபரை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் சான்றுப்பொருள் காப்பகம் கடந்த 20ம் திகதி உடைக்கப்பட்டு அங்கு வழக்கொன்றில் சான்றுப்பொருளாக இருந்த கஞ்சா பொதிகள் திருடப்பட்டன.
இதனையடுத்து கடந்த 21ம் திகதி இக்கனவுச்சம்பவம் தொடர்பாக நீதிமன்ற காவலாளி மற்றும் பதிவாளர் உத்தியோகத்தர்கள் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்த கிளிநொச்சிப் பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் கடந்த 21ம்; திகதி திங்கட்கிழமை இரவு 7.00 மணியளவில் கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் ஒரு சந்தேக நபரை கிளிநொச்சி பொலிசார் கைது செய்ததுடன் சான்றுப்பொருட்களையும் கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து குறித்த சந்தேக நபரை கடந்த 22ம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிவான் எம்.ஐ.வகாப்தீன் முன்னிலையில் ஆயர்படுத்தியதுடன் ஒரு வார காலம் பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான அனுமதியினை கோரிய நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் அவர்களின் முன்னிலையில் அவரது அலுவலகத்தில் ஆயர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 09ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை இக்களவுச்சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கடந்த 21ம்திகதி வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து ஒரு தொகுதி சான்றுப்பொருட்களான கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் இரு சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments