5ம் தர புலமை பரிசில் பரீட்சையில் 75 புள்ளிகளுக்கும் மேல் பெற்ற சகல பிள்ளைகளையும் பரிட்சையில் சித்தியடைந்ததாக கருதி அவர்களுக்கு விசேட சான்றிதழை வழங்க நடவடிக்கையெடுத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி இம்முறை பரீட்சைக்கு தோற்றிய 333,672 பேரில் 254,690 பேர் 75 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாகவும் இவர்களுக்கான சான்றிதழ்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் புலமை பரிசிலை குறிப்பிட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகக்கது.
0 Comments