நடிகர் விவேக்கின் மகன் பிரசன்ன குமார் நேற்று உயிரிழந்தார். இச் செய்தி திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை , சாலிகிராமத்தில் உள்ள விவேக்கின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நடிகர் அஜித் , விஜய், தனுஷ், இயக்குனர் தங்கர் பச்சான் ஆகியோரும் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். நடிகர் அஜித் தனது காயத்தையும் பொருட்படுத்தாது அஞ்சலி செலுத்துவதற்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பிரசன்ன குமாரின் இறுதி அஞ்சலி இன்று இடம்பெறவுள்ளது. திரைப்பிரபலங்கள் பலர் டுவிட்டர் உட்பட சமூகவலைதளங்களின் ஊடாகவும் சோகத்தை பகிர்ந்து வருகின்றனர்.
0 Comments