அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் ஆளும் லிபரல் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் அக்கட்சியின் புதிய தலைவர் மால்கம் டர்ண்புல் நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசியலில் ஏற்பட்ட பரபரப்புகளுக்கு நடுவே திடீரென்று நடத்தப்பட்ட, லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியிலேயே டோனி அபாட் தோல்வியடைந்தார்.
டோனி அப்பாட்டின் கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த மால்கம் டர்ண்புல்லுக்கு, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள லிபரல் கட்சியின் உறுப்பினர்களிடையே நடந்த வாக்கெடுப்பில் 54 வாக்குகள் கிடைத்தன. டோனி அபாட்டுக்கு 44 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
அவுஸ்திரேலியா வாக்காளர்கள் மத்தியில் டோனி அபாட்டின் செல்வாக்கு குறைந்து வந்த போதிலும், அவரது அரசியல் ஓய்வு மிகவும் வேகமாக வந்துள்ளது.
கட்சியின் தலைமைப் பொறுப்பில் மாறுதல் ஏற்படக்கூடும் என்று வந்த ஊகங்களை இன்று காலை அவர் புறந்தள்ளியிருந்தார்.
ஆனால், சில மணிநேரம் கழித்து அவர் பதவி இழக்கும் நிலை ஏற்பட்டது.
ஆஸி. பிரதமர் அப்பொட் தோல்வி புதிய பிரதமராக மல்கொம் டேர்ன்பல்
அவுஸ்திரேலிய தலைமைத்துவத்துக்கான தேர்தலில் பிரதமர் டோனி அப்பொட்டை சிரேஷ்ட அமைச்சரான மல்கொம் டேர்ன்பல் தோற்கடித்துள்ளார்.
லிபரல் கட்சிக்கான புதிய தலைவரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற போது மல்கொம் 54 வாக்குகளைப் பெற்று 44 வாக்குகளைப்
பெற்ற டோனி அப்பொட்டை தோற்கடித்துள்ளார்.
பெற்ற டோனி அப்பொட்டை தோற்கடித்துள்ளார்.
அதேசமயம் அந்தக் கட்சியின் பிரதித் தலைவராக ஜூலி பிஷொப் தொடர்ந்து நீடிக்கவுள்ளார்.
டோனி அப்பொட் தனது இராஜினாமா கடிதத்தை ஆளுநர் நாயகத்திடம் சமர்ப்பித்த பின்னர் மல்கொம் பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திங்கட்கிழமை வாக்கெடுப்பிற்கு முன்னர் கன்பெராவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் கூட்டத்தில் உரையாற்றிய மல்கொம், டோனி அப்பொட் தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியில் நீடித்திருப்பராயின் கூட்டமைப்பு அரசாங்கம் அடுத்த வரும் தேர்தலில் தோல்வியைத் தழுவும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த அரசாங்கம் பொருளாதார தலைமைத்துவத்தை வழங்குவதில் வெற்றிகரமாகத் திகழவில்லை என்பது தெளிவாகவுள்ளதால் புதிய தலைமைத்துவம் அவுஸ்திரேலியாவுக்கு தேவையாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
2013ம் ஆண்டிற்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் பிரதமராக பதவியேற்கும் நானகாமவராக மல்கொம் விளங்குகிறார்.
2013ம் ஆண்டிற்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் பிரதமராக பதவியேற்கும் நானகாமவராக மல்கொம் விளங்குகிறார்.
2013ம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற தலைமைத்துவத்துக்கான வாக்கெடுப்பில் தொழில் கட்சி பிரதமர் ஜூலியா கில்லார்ட், கெவின் ருத்தால் வெளியேற்றப்பட்டிருந்தார். அதற்கு சில மாதங்கள் கழித்து டோனி அப்பொட்டின் லிபரல் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றிருந்தது.
ஜூலி கில்லார்ட அதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டில் கெவின் ருத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றி பிரதமர் பதவியை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மல்கொம் டேர்ன்பல், டோனி அப்பொட்டிற்கு எதிராக தலைமைத்துவத்துக்ககுப் போட்டியிடுவதற்கு முன்னர் அவரது ஆட்சியின் கீழ் தொடர்பாடல் அமைச்சராக சேவையாற்றியிருந்தார்.
காலநிலை மாற்றம் தன்னினச்சேர்க்கை திருமணம் என்பன தொடர்பில் அவர் வழங்கி வரும் ஆதரவு தொடர்பில் அவரது கட்சியைச் சேர்ந்த பலர் அதிருப்தியை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2008 – 2009ம் ஆண்டு காலப் பகுதியில் எதிர்க்கட்சியாகவிருந்த லிபரல் கட்சிக்கு தலைமை தாங்கிய அவர், இதற்கு முன் இடம்பெற்ற தலைமைத்துவத்துக்கான தேர்தலில் டோனி அப்பொட்டிடம் ஒரு வாக்கால் தோல்வி கண்டிருந்தார்.
0 Comments