அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தலைவர் எம்.திலீபன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக எதிர்வரும் 30 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வேலையில்லா பட்டதாரிகளுக்கு உடன் நியமனம் வழங்கப்படவேண்டும், கிழக்கு மாகாணத்தில் இனிவரும் காலங்களில் இன விகிதாசாரத்தைப் பேணி தமிழ் பட்டதாரிகளை புறக்கணிப்பை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதப் போரட்டம் இடம்பெறவுள்ளது.
இதில் சுமார் 300 வேலையில்லா பட்டதாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தில் 350க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இன்றி இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


0 Comments