Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நிஷா தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை சந்திப்பு!

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வாலை நாளைய தினம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ள நிலையில், குறித்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக 
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்றைய தினம் கொழும்பு சென்றுள்ளார். 
இன்றைய தினம் வடமாகாணசபையின் 33வது அமர்வில் கலந்து கொண்ட முதலமைச்சர், காலை 10.45 மணியளவில் மேற்படி சந்திப்பிற்காக கொழும்பு செல்லவுள்ளமை தொடர்பாக அறிவித்ததன் பின்னர் சபையிலிருந்து வெளியேறினார். 
இதேவேளை நாளைய தினம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் முதலமைச்சர் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments