அரசியல் தீர்வொன்று கிடைக்கும்வரை அமைச்சுப்பதவிகளையோ வேறு எந்தப்பதவிகளையோ ஏற்கப்போவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தேசிய அரசானது நிலையான அரசியல் தீர்வொன்றை வழங்க விரைவான செயற்பாடுகளில் இறங்குமென்று நாம் நம்புகின்றோம்.
ஜனாதிபதி அந்தக் கைங்கரியத்தில் பின்நிற்கமாட்டார் என்றும் நம்புகின்றோம்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வட-கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்திருக்கும் ஆணையென்பது மக்கள் எம்மீது வைத்திருக்கும் உயர்ந்த நம்பிக்கையைக் காட்டுகின்றது.
வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல தேசிய அளவிலும் மூன்றாம் நிலை பலம் பொருந்திய கட்சியாக வெற்றிவாகை சூடவைத்த மக்களுக்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


0 Comments