காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான 3ஆவது அமர்வு கடந்த சனிக்கிழமை முதல் இன்று செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது. அந்த வகையில் மட்டு மாவட்டத்துக்கான 3ஆவது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நிறைவுக்கு வந்தது.
இந்த அமர்வில், ஆணையாளர்களான திருமதி.மனோகரி ராமநாதன், டனிள்யூ ரட்னாயக்க,எச்.டபிள்யு.குணதாச, திருமதி.சுரஞ்சனா வித்தியாரெட்ன, பத்மல் வீரசிங்க, ஆகியோருடன் சட்ட ஆலோசகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மண்முனை தென் எருவில் பற்று, போரதீவு பற்று ஆகிற பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான விசாரணைகள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்தது.
சனிக்கிழமை 324பேருக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. புதிய முறைப்பாடுகள் 154 கிடைத்திருந்தது. அன்றைய தினம் 328 பேரிடம் விசாரணைகள் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை 315 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 246 புதிய விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. மொத்தமாக 411 பேரிடம் விசாரணைகள் நடைபெற்றன.
கோறளைப் பற்று, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி மற்றும் கோறளைப்பற்று என 3 பிரதேச செயலகங்களைச் சேர்ந்தவர்களுக்கான விசாரணைகள் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கோரளைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
திங்கட்கிழமை 255 பெருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. புதிய விண்ணப்பங்களாக 130 கிடைத்திருந்தது. 201 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்று செவ்வாய்க்கிழமை 187 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. புதிய விண்ணப்பங்கள் 130 கிடைததிருந்தது. 201 பேரிடம் விசாரணைகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நான்கு நாட்களாக 1208 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்தது. இதில் புதிய முறைப்பாட்டாளர்களும் உள்ளடங்குவதாகவும் ஆணைக்குழு தெரிவித்தது.
அதே நேரத்தில், மொத்தமாக 1081 பேருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன. அத்துடன் நான்கு நாட்களிலும் புதிய முறைப்பாடுகள் 699 கிடைத்துள்ளன.


0 Comments