மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வரட்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மாவட்டத்தில் வரட்சி காரணமாக வவுணதீவு, கொக்கடிச்சோலை, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், அந்த பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
வரட்சி காரணமாக ஏரிகள், ஓடைகள்; குளங்கள் வற்றி வருகின்றன.
பிரதான நீர்ப்பாசன குளங்களிலும் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாக நீர்பாசன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


0 Comments