Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சிரமதானற்கு சென்ற மாணவர்கள் விபத்து – மட்/தேற்றாத்தீவில் சம்பவம்

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்டபட்ட தேற்றாத்தீவு மகா வித்தியால மாணவர்கள் இன்று(25.05.2015) திங்கட்கிழமை காலை 08.00 மணியவில் தேற்றாத்தீவில் இருந்து சிறிய ரக டிரிப்பர் மூலம் செட்டிபாளையம் வருடந்த சடங்கை முன்னிட்டு ஆலய நிர்வாக்த்தின் அழைப்பிக் பெயரில் சிரமதானம் மேற்கொள்வதற்க புறப்பட்டு ஒரு சில வினாடிகளில் டிப்பர் வாகனத்தின் தட்டி கழன்றதானால் டிப்பரில் பயணித்த மாணவர்கள் ஓடும் வகத்தில் இருந்து கிழே விழுத்து விபத்துக்குள்கினர்.


இவ் விபத்தில் முன்று மாணவர்கள் படுகாயம் அடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதில் ஒரு மாணவருக்கு கையில் பலத்த எலும்பு முறிவுக்குள்ளாகி இருப்பதனால் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைதத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.இவ் விபத்தில் பாதிப்புள்ளாகிய மாணவர்கள் செட்டிபாளயம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் விபத்து தொடர்பான விசாரணையை மேற்கொண்டனர். குறித்த வாகனதில் எண்பது அதிகமான மாணவர்களை ஏற்றியதனால் வானத்தின் சம நிலையில் தடம்பல் ஏற்பட்டதனால் விபத்து ஏற்பட்டதாக அறியமுடிந்தது வாகன சாரதியை களுவாஞ்சிகுடி பொலிசார் கைது செய்து களுவாஞ்சிகுடி நிதவான் நிதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தபடவுள்ளார்.

Post a Comment

0 Comments