முட்டக்களப்பு துறைநீலாவணை விபுலானந்தர் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் சீருடைவழங்கிவைக்கும் நிகழ்வு துறைநீலாவணை இந்து இளைஞர் மன்றத்தலைவர் சோ.சந்திரகுமார் தலைமையில் 19 திகதி செவ்வாய்க்கிழமை மாலை தில்லையம்பலப்பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
இதில் கிழக்குமாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா இந்திரகுமார் பிரசன்னா உட்பட பலர் கலந்துகொண்டனர்
அவர் தொடர்ந்து பேசுகையில்
இன்று எமது சமுகத்தின்மத்தியில் பல சீரழிவுகள் இடம்பெறுகின்றது இவற்றுக்கெல்லாம் சிறந்த அறநெறிக்கல்வி போதிக்கப்படாமையே காரணமாகும் அதனால் துறைநீலாவணை விபுலானந்த அறநெறிப்பாடசாலைபோன்று அனைத்து இடங்களிலும் அறநெறிபோதிக்கப்படவேண்டும் இதற்காக எங்களால் இயன்ற உதவிகளை செய்து தரமுடியும்
அறநெறிக்;கல்வியினூடகவே சிறந்த நல்லொழுக்கமுடைய சமுதாயத்தை உருவாக்கமுடியும் ஆகயால் ஒழுக்கத்தினை மனதில் நிலை நிறுத்தி வைத்துக்கொண்டோம் என்றால் மிகப்பெரிய உறுதிகிடைக்கும் இதற்கு எடுத்துக்காட்டாக காந்தியடிகள் விளங்கியவர் அவரது சத்தியசோதனையினை கற்றால் இன்னும் பல ஒழுக்க விழுமியங்களை அறியமுடியும்
பௌத்தர்கள் அறநெறிப்பாடசாலைகளை பன்சாலையில் வைத்திருக்கிறார்கள் மதரிஸாக்களில் முஸ்லிங்கள் தங்களது அறநெறிப்பாடசாலையினை நடாத்திக்கொண்டு இருக்கின்றனர் இந்துக்களுக்கு அவ்வாறு இல்லை ஆரம்பகாலத்திலே இந்து ஆலயங்களில் போதனைகள் சித்தாந்த பாடங்கள் என்பன நடைபெற்று வந்த இடமாக இருந்தன இன்று அவ்வாறு இல்லாது மாறிவிட்டது
இன்று சடங்கு கும்பாபிசேகம் போன்ற நிகழ்வுகளே இடம்பெறுகிறது போதனைகளோ கதைப்பிரசங்கமோ இடம்பெறுவது குறைவாகவே இருக்கிறது அவ்வாறு இல்லாது ஆலயங்களில் கதைப்பிரசங்கங்களை நாள்தோறும் நடாத்தவேண்டும் அதற்கு இந்து மதகுருமார் வழிகாட்டவேண்டும் ஏன் எனில் திசைமாறி ஒழுக்கம் கெட்டு செல்வோருக்கு மதப்பிரசங்கமும் அறநெறிக்கல்வியின்தேவையும் இன்றியமையாததாக இருக்கின்றது என்றார்
0 Comments