மட்டக்களப்பின் ஊறணியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் 45 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.
காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிளான சந்தேகநபர் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அங்கிருந்து தப்பியோடிய சந்தேகநபர் கல்லடிப் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
எனினும் அவரைப் பின்தொடர்ந்த சக பொலிஸார் காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். பின்னர் அவரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிவான் அவரை எதிர்வரும் ஜுன் 5 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார்.
குறித்த சந்தேகநபர் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மகளையே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படுகின்றது
0 Comments