இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் 50 கிலோகிராம் எடையுடைய வெடிகுண்டொன்று லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு லண்டனில் உள்ள பிரபலமான வெம்ப்ளே கால்பந்து மைதானமனருகே மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டுமானப் பணிகளின் போதே இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெடிகுண்டைப் பரிசோதனை செய்த பொலிஸார் அது இரண்டாம் உலக யுத்தத்தின்போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத குண்டு எனத் தெரிவித்துள்ளனர். 50 கிலோகிராம் எடைகொண்ட அந்தக் குண்டை செயலிழக்க வைக்கும் பணியில் தற்போது பொலிஸார் ஈடுபட்டு வருவதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பகுதியில் குண்டைச் செயலிழக்க வைக்கும் பணி முன்னெடுக்கப்படுவதால் குறித்த குண்டு காணப்படும் பகுதியிலிருந்து சுமார் 400 மீற்றர் சுற்றளவில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments