புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து நாளை வடக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளையும் மூடி பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த திரட்சியான போராட்டத்துக்கு நாம் எங்கள் முழுமையான ஆதரவை வெளியிடுகின்றோம் என யாழ் மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக மிகமோசமான தமிழ் மக்கள் வெறுக்கத்தக்க எமது சமூகம் அழியக்கூடியதான பாணியில் வன்முறைகளும் பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் கடத்தல்களும் இடம்பெற்று வருகின்றன.
இவற்றை முளையிலே கிள்ளாதநிலையே இங்கு காணப்படுகின்றது. குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புகின்ற நிலையும் காணப்படுகின்றது. சமுக சீரழிவுக் கும்பல்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
சமூக வன்முறைக் கும்பல்கள் உருவாக்கப்பட்ட நிலையிலும், அவை கண்டும் காணாமல் விடப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் உச்சக்கட்டமாக மாணவி வித்தியாவின் படுகொலையும் இடம்பெற்றுள்ளது.
இத்தகைய சூழலை தடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்று திரண்டு மிகப்பெரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை செய்வது எமது காலக்கடமை. இதில் சகல தரப்பும் இணைந்து கொள்வது அவசியம்.
நாளை இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் மேற்கொள்ள இருக்கும் வடக்கு மாகாணம் தழுவிய பாடசாலை பகிஸ்கரிப்புக்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவதுடன், தமிழ் தேசிய கூடடமைப்பினராகிய நாமும் எமது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
வித்தியா படுகொலையில் பத்தாவது நபர் தப்பி ஓட்டம்: பிடித்து தரும்படி மக்கள் கொந்தளிப்பு!
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சிக்கிய பத்தாவது நபர் ஒருவர் வழக்கறிஞர் ஒருவரூடாகவெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு முயற்சித்துள்ளார்.
பொது மக்கள் அவரை பிடித்து தருமாறு பொலிஸாரிடம் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்து வித்தியா கொலை வழக்கில் சிக்கி இருப்பதாக கூறப்படுகின்றது.


0 Comments