மனிதன் மனிதனுக்குச் செய்யும் சேவைகள் என்றும் அழியாத வண்ணம் காணப்படும். ஆகவே நேபாளத்திற்கான எமது சேவை என்றும் அவர்களின் இதயங்களின் மீது பதிந்திருக்கும்.
இந்நிலையில் நாட்டில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டின் பாதுகாப்பினை உறுதிப் படுத்தியதனை போன்று பிராந்திய பாதுகாப்பிற்கு எமது நாட்டின் இராணுவ வீரர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாக உள்ளது.
ஆகவே சர்வதேச அளவில் எமது இராணுவம் வளர்ச்சி காண வேண்டும். அதேபோன்று நேபாளத்தைப் போன்று இலங்கையிலும் அனர்த்தங்கள் ஏற்படுவ தற்கான எதிர்வுகூறல்கள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன. ஆகையால் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க தயாராக வேண்டியுள்ளது என்றார்.


0 Comments