சவுதி அரேபியாவில் மரண தண்டனை அதிகரித்ததை அடுத்து, பொதுஇடத்தில் வைத்து அதனை நிறைவேற்ற ஆள்வேண்டும் என்று அந்நாட்டு அரசு விளம்பரம் செய்துஉள்ளது.
உலகில் அதிகமாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகள் பட்டியலில் மன்னர் ஆட்சி நடைபெற்று வரும் சவுதி அரேபியா 5-வது இடம் பிடித்துஉள்ளது. இத்தகையை கொடூரமான பணியினை செய்ய, ‘மரண தண்டனையை நிறைவேற்ற’ ஆட்கள் தேவை என்று விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. மிகவும் குறைவான சம்பளம் மற்றும் எந்த ஒரு சிறப்பு தகுதிகளும் தேவைப்படாத இந்த வேலை மிகவும் எண்ணிப்பார்க்க முடியாதது. மரண தண்டனையை நிறைவேற்ற 8 பேர்கள் வேண்டும் என்று சவுதி அரேபியா விளம்பரம் செய்து உள்ளது.
மரண தண்டனை அதிகரித்து உள்ளதை அடுத்து அதனை நிறைவேற்ற ஆட்கள் தேவை என்று கூறப்பட்டு உள்ளது. பொது இடத்தில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்படும். மரண தண்டனை நிறைவேற்றுவதில் கடந்த 2014ம் ஆண்டில் சீனா மற்றும் ஈரானை தொடர்ந்து சவுதி அரேபியா மூன்றாவது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு சவுதி அரேபியாவில் 85 பேர்கள் தலையை வெட்டி கொலை செய்யப்பட்டு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது என்று சவுதி அரேபியா செய்தி ஏஜென்ஸி தெரிவித்து உள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு மொத்தமே 88 பேருக்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டு உள்ளது.
கடந்த வருடம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில் பெரும்பாலானோர் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் ஆவர். இவர்களில் பாதிபேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் மற்றவர்கள் பாகிஸ்தான், ஏமன், சிரியா, ஜோர்டான், இந்தியா, இந்தோனேஷியா, பர்மா, ஷாட், பிலிப்பைன்ஸ் மற்றும் சுடான் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மரண தண்டனை ஏன் அதிகரித்தது என்பதற்கு சவுதி அரேபியா அதிகாரிகள் விளக்கம் தெரிவிக்கவில்லை, இருப்பினும் மேலும் கூடுதல் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பிராந்திய கொந்தளிப்பில் நீதித்துறையின் கடினமான பதில் பிரதிபலிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


0 Comments