Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இன்று ஹர்த்தால்.

யாழ். புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று மட்டக்களப்பில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.


நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மாநகர சந்தை என்பன பூட்டப்பட்டிருந்ததோடு மக்களின் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டன.

பஸ் நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. இ.போ.ச. போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்துக்கள் இடம்பெறாத போதும் தூர இடங்களிலிருந்து வந்த பஸ்கள் காலை வந்து சேர்ந்தன.

அரச மற்றும் தனியார் பாடசாலைகள், தொழில் நுட்பக் கல்லூரி பல்கலைக் கழகங்கள் உயர் தொழில் நுட்பவியல் கல்லூரிகளுக்கு முற்றாக மாணவர்கள் வருகைதரவில்லை.

நீதி மன்றங்கள்வங்கிகள் கச்சேரி  அரச திணைக்களங்கள் என்பனவற்றில் மக்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தன.








Post a Comment

0 Comments