முகத்தை முழுமையாக மூடிய தலைக்கவசம் தொடர்பில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது.
பொலிஸ் தலைமையகம் மற்றும் பயணிகள் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை ஆகியவற்றின் வேண்டுகோளின்படியே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டதன் பின்னர், குறித்த தரத்தில் அல்லாத முகமூடி தலைக்கவசம் விற்பனை செய்வதோ, கடைகளில் காட்சிப்படுத்துவதோ தடை செய்யப்படவுள்ளது.
அவ்வாறு விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
0 Comments