மட்டக்களப்பு இருந்து கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டொல்பின் ரக மோட்டார் வண்டி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தானது பெரிய நீலாவணை வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைக்கு முன்னால் ஏற்பட்டுள்ளது(மதுபான சாலைக்கு அருகில் ). மிக வேகமாக வந்த டொல் ரக மோட்டார் வண்டியின் சில்லின் காற்று வெளியேறியதால் கட்டிடத்தை உடைத்துக் கொண்டு உட்புகுந்துள்ளது. செலல்லும் வேளையில் பஸ்சின் முன் பகுதியிலும் மோதிக் கொண்டு சென்றுள்ளது. விபத்தின் போது காயங்கள் ஏற்பட்டுள்ளது. தெய்வாதீனமாக உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. விபத்தானது 14.05.2015 அன்று பி.ப. 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்















0 Comments