Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இந்தியாவிலிருந்து படகு மூலம் கடத்­தி­வ­ரப்­பட்ட 8 கோடி ரூபா பெறு­ம­தி­யான ஹெரோயின் சிக்­கி­யது

மார­வில, தொடு­வாவ கடற்­கரை பகு­தியில் இருந்து சுமார் 8.5 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­னரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.
கட்­டு­நா­யக்க விமான நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­ன­ருக்கு கிடைத்த தகவல் ஒன்­றுக்கு அமை­வாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதி­கா­ரிகள் இணைந்து

மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.
மேலும் சந்­தே­கத்தின் பேரில் மீனவர் ஒருவர் உள்­ளிட்ட இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்பிட்டார்.
இந்­தி­யாவில் இருந்து படகு மூலம் இலங்­கைக்கு ஹெரோயின் கடத்­தலில் ஈடு­பட்ட வலை­ய­மைப்பு தற்­போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அத­னுடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நபர் அடை­யாளம் காணப்­பட்­டுள்ள நிலையில் அவரை கைது செய்யும் நடவ்­டிக்­கைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.
இந்த போதைப் பொருள் வலை­ய­மைப்­புடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நப­ராக அடை­யாளம் காணப்­பட்­டுள்ளவர் திரைப்­பட இயக்­குனர் என அடை­யளம் காணப்­பட்­டுள்­ள­துடன் அவ­ருக்கு எதி­ராக இலங்­கை­யிலும் இந்­தி­யா­விலும் போதைப் பொருள் வழக்­குகள் நிலு­வையில் உள்­ள­தாகவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்­பவம் குறித்து மேலும் அறி­ய­மு­டி­வ­தா­வது,
கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் கட­மையில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை போதைப் பொருள் கடத்தல் சம்­பவம் ஒன்று தொடர்பில் தகவல் ஒன்று கிடைத்­துள்­ளது. அதனைத் தொடர்ந்து அந்த தகவல் கொழும்பு பொலிஸ் தலைமைய­கத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் தலமை காரி­யா­ல­யத்­துக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் அந்த பிரி­வுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதி­பரும் மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பா­ன­வ­ரு­மான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ரவின் நேரடி மேற்­பார்­வையில் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன.
இது தொடர்பில் மார­வில, தொடு­வாவ கடற்­கரை பிர­தே­சத்­துக்கு சென்ற விஷேட பொலிஸ் குழு அங்கு தங்­கி­யி­ருந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர். இதன் படி அன்­றைய தினம் இரவு வேளையில் அக்­க­டற்­கரை பகு­தியில் உள்ள புதர் நிறைந்த காட்­டுப்­ப­கு­திக்குள் இருந்து 6 பொதிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. அந்த பொதி­க­ளுக்குள் ஹெரோயின் போதைப் பொருள் உள்­ளதைக் கண்­ட­றிந்த பொலிஸார் அவற்றின் நிறை 6கிலோ 528 கிராம் என கண்­ட­றிந்­தனர்.
இதனைத் தொடர்ந்து விசா­ர­ணை­களை விரிவு படுத்­திய பொலிஸார் பொலிஸ் மோப்ப நாயின் உத­வி­யுடன் தேடு­த­லையும் விரிவு படுத்­தினர். இதன் பல­னாக அதே புதர் காட்­டுக்குள் இருந்து மேலும் இரு பொதிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­துடன் அவற்றின் நிறை 2 கிலோ­வாகும். இந் நிலையில் மொத்­த­மாக கைப்­பற்­றப்­பட்ட ஹெரோயின் போதைப் பொரு­ளா­னது சுமார் 8.5 கிலோ என்றும் அதன் பெறு­மதி 800 இலட்சம் ரூபா­வுக்கும் அதி­க­மா­னது எனவும் பொலிஸ் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் தல­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குன­சே­கர மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,
நேற்றும் நேற்று முன் தினமும் பொலிஸார் மேற்­கொன்ட தொடர் விசா­ர­ணை­க­ளுக்கு தொடு­வாவ பிர­தேச மக்கள் பெரிதும் ஒத்­து­ழைப்பு வழங்­கினர். இந்­தி­யாவில் இருந்து இந்­திய படகு ஊடாக கடத்­தி­வ­ரப்­படும் ஹெரோயின் எல்­லையில் வைத்து இலங்கை பட­குக்கு மாற்­றப்­ப­டு­கின்­றன. இதனைத் தொடர்ந்தே அவை தொடு­வாவ கடற்­க­ரைக்கு கொன்­டு­வா­ரப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. கரைக்கு அந்த போதைப் பொரு­ளா­னது சிறிய கடற் களங்கள் ஊடா­கவே கொன்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­மையை பொலிஸார் கண்­ட­றிந்­துள்­ளனர். அதன் படி அந்த கடற் களத்தை செலுத்­தி­ய­வ­ரியும் பிறி­தொ­ரு­வ­ரையும் நாம் நேற்று வரை கைது செய்தோம். அவர்கள் இரு­வ­ருக்கும் எதி­ராக மார­வில நீதி­மன்றில் 7 நாள் ர்தடுப்புக் காவல் உத்­த­ரவை நாம் பெற்­றுக்­கொன்­டுள்ளோம். இந் நிலை­யி­லேயே பிர­தான சந்­தேக நபரை அடை­யாளம் கண்டு அவரைத் தேடி வலை வீசப்­பட்­டுள்­ளது.

Post a Comment

0 Comments