Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஜெயலலிதா 17ஆம் திகதி தமிழக முதல்வராகிறார்

ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை பெற்ற ஜெயலலிதா எதிர்வரும் 17ஆம் திகதி தமிழக முதலமைச்சராக மீண்டும் பதவியேற்க உள்ளததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், அதற்கான தொடர்பான சுபதினமாக எதிர்வரும் 17ஆம் திகதியை தெரிவு செய்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றசாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு 10 வருடங்கள் அரசியல் வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை முன்னர் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் அவர் சகல குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுதலை செய்யப்படுவதாக கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவித்தது. 

67 வயதான ஜெயலலிதா ஜெயராமிற்கு பெங்களுர் நீதிமன்றம் கடந்த வருடம் சிறை தண்டனை விதித்தது.

Post a Comment

0 Comments