Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இரு­வரை சுட்­டுக்­கொலை செய்த சந்­தேக நபர் 12 வரு­டங்­களின் பின் கைது

பன்­னி­ரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் மட்­டக்­க­ளப்பு ஆரை­யம்­பதி பிர­தே­சத்தில் இரு­வரை சுட்­டுக்­கொலை செய்­தமை மற்றும் கைக்­குண்டு தாக்­குதல் நடத்தி எட்டுப் பேரை காய­ம­டையச் செய்­தமை தொடர்பில் முன்னாள் விடு­தலைப் புலி உறுப்­பினர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக காத்­தான்­குடி பொலிஸார் தெரி­வித்­தனர். காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்தில் உள்ள மட்­டக்­க­ளப்பு மாவட்ட பொலிஸ் குற்­றப்­பு­ல­னாய்வு துறை­யி­ன­ருக்கு கிடைக்கப் பெற்ற இர­க­சிய தக­வலின் அடிப்­ப­டை­யி­லேயே இவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். கொக்­கட்­டிச்­சோலை மகி­ழ­டித்­தீவில் உள்ள குறித்த நபரின் வீட்டில் வைத்து நேற்று முன்­தினம் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் கைது செய்­யப்­பட்­டவர் நாக­மணி ஜெக­தீஸ்­வரன் என்னும் முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பினர் எனவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.
இவர்கள் 2003ஆம் ஆண்டு சித்­திரை மாத காலப்­ப­கு­தியில் ஆரை­யம்­பதி பிர­தே­சத்தில் உள்ள ஆல­ய­மொன்றின் நிகழ்­வுக்கு சென்ற இருவர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டமை மற்றும் ஆரை­யம்­பதி பிர­தே­சத்தில் கைக்­குண்டு தாக்­குதல் நடாத்தி எட்டுப் பேரை காயப்­ப­டுத்­தி­யமை தொடர்­பி­லேயே கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் காத்­தான்­குடி பொலிஸார் தெரி­வித்­தனர். குறித்த நபர் ஆரை­யம்­பதி பிர­தே­சத்­தினை சேர்ந்­தவர் எனவும் தற்­போது திரு­மணம் செய்து மகி­ழ­டித்­தீவில் வாழ்ந்து வரு­வ­தா­கவும் இவர் நீண்ட கால­மாக மத்­திய கிழக்கு நாட்­டுக்கு சென்று விட்டு தற்­போது திரும்பி வந்த நிலை­யி­லேயே நேற்று கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட பொலிஸ் குற்­றப்­பு­ல­னாய்வு துறை­யினர் தெரி­வித்­தனர். கைது செய்யப் பட்டவர் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணை பூர்த்தி யானதும் நீதிமன்றில் ஆஜ ர்படுத்தப்படுவர் எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments