Advertisement

Responsive Advertisement

சிவராமின் படுகொலைக்கு வித்திட்ட சில உண்மை விடயங்கள் உள்ளே ... (காணொளி இணைப்பு)

சிவராம் பத்திரிகைத்துறை ஜாம்பவான். இனப்பற்றும், நேர்மையும், துணிச்சலும் மிக்க ஊடகவாதி, ஆங்கிலம் தமிழ் இரு மொழிகளிலும் அறிவுசார் புலமையுள்ள ஒரு அரசியல். இராணுவ ஆய்வாளன்,
தமிழரின் நோக்குநிலையில் இருந்து இலங்கையின் அரசியல். சமூக விவகாரங்களையும். அன்றாடச் செய்திகளையும். ஆங்கில மொழிமூலம் வழங்கும் ‘தமிழ்நெற்’ இணையத்தளம் உலகப்பிரசித்தமானது.


இலங்கையுடன் தொடர்புடைய வெளிநாட்டு இராசதந்திரிகளின் அலுவலக மேசைகளில் அதன் நாளாந்த கணனிப் பிரதிகள் எப்போதும் இருக்குமளவிற்கு செய்திகளின் உண்மைத்தன்மையும் நேர்த்தியும் செய்தி ஆய்வுகளும் தரம் வாய்ந்தவை இத்தகைய சர்வதேச தரத்திற்கும் கீர்த்திக்கும் காரணம் அவ் இணையத்தளத்தினை உருவாக்கி வழிநடத்தியது டி.சிவராம் தான்.


டி.சிவராம் என்ற சொல்லின் பின்னால் உண்மை, நேர்மை, நட்பு, துல்லியம், தர்க்கீகம் மாக்சீசம் தீர்க்கதரிசனம் எனப்பல்வகைப் பண்பும் பல்துறை ஆற்றலும் விரிந்துகிடக்கின்றது


வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் பலரை கணினி யுகத்திற்குள் கொண்டுவந்த பெருமையும் சிவராமையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments