போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் (ஈழத் தமிழர்) மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கும் ஏனைய அறுவருக்கும் சற்று முன்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
12 பொலிஸார் சூழ்ந்திருக்க இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்தோனேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. உயரதிகாரிகள், அவுஸ். அதிகாரிகள், பிலிப்பைன்ஸ் அதிகாரிகள், உறவினர்கள், கருணை உள்ளம் கொண்ட மக்கள் என சர்வதேச அளவில் அனைவரும் இந்தோனேசிய அரசிடம் தண்டனையை ரத்து செய்யுமாறு கேட்டபோதிலும், தண்டனையை நிறைவேற்றியுள்ளது இந்தோனேசிய அரசாங்கம்.
இறுதி முத்தமிடும் மயூரனின் நிமிடங்கள் விடை கொடுக்கும் அந்த நிமிடங்கள் அங்கு தரித்து நின்ற அதிகளாரிகள் பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியதாக அங்கு உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments